• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

18 ஆண்டுகளுக்கு பின் இணையும் “காதல்” ஜோடி!

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி பெருமளவில் பேசப்பட்ட திரைப்படம், ‘காதல்’. இயக்குனர் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றது. மேலும் பில்ம்பேரின் 2004ம் ஆண்டின் சிறந்த திரைப்படம் என விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் 18 வருடங்கள் கழித்து மீண்டும் புது திரைப்படம் ஒன்றில் பரத் மற்றும் சந்தியா இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!