தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வைத்துள்ளார். அதாவது புதுச்சேரியில் படப்பிடிப்பு கட்டுமான ₹10,000 வசூலிக்காமல் ₹28,000 ஐ அதிகாரிகள் வசூலிப்பதாக முதலமைச்சர் ரங்கசாமியிடம் கூறியுள்ளார். அதிக கட்டணம் வசூலிப்பதால் சினிமா துறையினர் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அதனையடுத்து கோரிக்கை குறித்து பரிசீலனை செய்வதாக சிவகார்த்திகேயனிடம் முதல்வர் ரங்கசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.











; ?>)
; ?>)
; ?>)