

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பான் இந்தியன் படமாக 5 மொழிகளில் ரிலீசாக உள்ளதாம். ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ள பீஸ்ட் படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமம் உலகம் முழுவதும் மிக அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம்.
தமிழகத்தில் பீஸ்ட் வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் வாங்கி உள்ளது. தெலுங்கு வெளியீட்டு உரிமத்தை தளபதி 66 பட தயாரிப்பாளரான தில் ராஜு வாங்கி உள்ளார். கன்னட வெளியீட்டு உரிமத்தை தீரஜ் என்டர்பிரைசசும், வெளிநாட்டு விநியோக உரிமத்தை ஐங்கரன் நிறுவனமும் வாங்கி உள்ளன.
பீஸ்ட் பான் இந்தியன் படமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதை உறுதி செய்யும் விதமாக புதிய போஸ்டர்கள் 5 மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அபர்ணா தாஸ், செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லே, சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கான ரிலீஸ் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
