• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

காசி விஸ்வநாதர் கோவிலில் ரோபோ சங்கரின் குடும்பத்தினர் சாமி தரிசனம்..,

ByKalamegam Viswanathan

Feb 16, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் திருக்கோவில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது வைகை ஆற்றில் இருந்து பெட்டி தூக்கி மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ அதிர் வேட்டுக்கள் முழங்க பெட்டி தூக்கி எடுத்து வரப்பட்டது

அப்போது வழி நெடுகிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் வேப்பை இலை கலந்த நீரை சாமியாடிகள் பாதத்தில் ஊற்றி தங்களது வேண்டுதல் குறித்து வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து திருக்கோவிலை அடைந்த பெட்டி வைக்கப்பட்ட ஆபரணங்கள் மூலம் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. பின்பு கருப்பசாமி அக்கினிவீரன் நொண்டி சாமி பேச்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

இதில் மேலக்கால் பன்னியான் விக்கிரமங்கலம் தேனூர் சோழவந்தான் தென்கரை முள்ளிப்பள்ளம் மற்றும் ஏராளமான பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மறைந்த திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் மனைவி மகள் மருமகன்பேரன் மற்றும் குடும்பத்தினர் மகாசிவராத்திரியில் கலந்து கொண்டு ஊர்வலத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.