• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ByI.Sekar

Feb 14, 2024

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நெடுஞ்சாலை துறையினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பெரியகுளம் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி சாலை விபத்தில்லா பள்ளி அதுவே நமது இலக்கு சாலை விதிமுறைகளை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்போம். போர்க்குவரத்து நெரிசலுக்கும் சாலை விபத்துக்களுக்கும் நாம் ஒவ்வொருவரும் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
சாலையில் உள்ள எச்சிரிக்கை பலகைகளையும் எச்சரிக்கை விளக்குகளையும் அறிந்து செயல்படுவோம். நமது கண் முன்னால் எவருக்கேனும் முதலுதவி தேவைப்பட்டால் தயங்காது செய்வோம். உயிர் காக்கும் சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
வாகனங்கள் பயன்படுத்தும் போது உரியபாதுகாப்பு முறைகளை பின்பற்றுவோம்
சிறு அளவு விபத்தில்லா தினமும் விபத்தில்லா தேசமும் நமது பொறுப்பு
பெரியவர்கள், சிறுவர்கள் வாகன ஓட்டுநர்கள் மது அருந்துவதை தவிர்த்து விடுமாறு பேரணியில் பெரியகுளம் அனைத்து மெயின் சாலையில் விழிப்புணர்வு நெடுஞ்சாலைத்துறை பள்ளி ஆசிரியர்கள், சிறுவர்கள் ஆகியோரும் பேரணியில் கலந்து கொண்டனர்.