• Sun. May 5th, 2024

தேனி வேளாண் அறிவியல் கல்லூரியில் விவசாயிகள் கருத்தரங்கம், ஆளுநர் பங்கேற்பு

ByI.Sekar

Feb 9, 2024

தேனி அருகே உள்ள காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் பெண் விவசாயிகள், பெண் தொழில் முனைவோர், மகளிர் சுய உதவி குழு அமைப்புகள் மற்றும் மா உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.
காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத் தலைவர் பச்சைமால் அனைவரையும் வரவேற்றார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து, மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்து விழா பேருரை ஆற்றினார்.
நாட்டின் வளர்ச்சிக்கு விவசாய மேம்பாடு மிகவும் அவசியம். விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றுவதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும். விவசாயம் என்பது உணவு சார்ந்தது. அதை எந்தத் துறையுடனும் ஒப்பிடமுடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், வாழை, மா சாகுபடி விவசாய விவரங்கள் அடங்கிய புத்தகத்தை ஆளுநர் வெளியிட்டார். மேலும், சிறந்த தொழில்முனைவோர், சுயஉதவிக் குழுக்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். ஏராளமான பெண்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *