

தேனியில் உள்ள மாவட்ட கவுன்சிலர்கள் அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரிதா நடேசன் தலைமையில் துணைத் தலைவர் ராஜபாண்டியன் செயல் அலுவலர் (பொறுப்பு ) சிவகுமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. தேனி மாவட்டத்தை சேர்ந்த 10 மாவட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட துணைத் தலைவர் ராஜபாண்டியன், துறை சார்ந்த அலுவலர்களிடையே மக்களுக்கு செய்து வரும் நலத்திட்டங்களை பற்றி கேள்விகளை எழுப்பினார். அந்த கேள்விகளுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் பதில் கூறி வந்த நிலையில், தமிழக அரசு சார்பில்கடந்த பொங்கல் பண்டிகையின் போது பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது என்றும் அந்த பரிசுத்தொகுப்பு தேனி மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாங்கவில்லை என்றும் , மேலும் இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பினை ஏழை எளிய மக்கள் ஏராளமானோர் வாங்காமல் இருக்கிறார்கள் என்றும், மாநில அரசு சார்பில் மாவட்ட ஊராட்சிக்கு எட்டு சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக தற்பொழுது நிதி குறைப்பு செய்துள்ளது என்றும், தற்பொழுது உள்ள மாநில அரசு மாவட்ட ஊராட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்து வருகிறது என்றும் குறிப்பாக தேனி மாவட்டத்திற்கு எந்த ஒரு அரசு நிதியும் ஒதுக்காமல் மாநில அரசு செயல்பட்டு வருகிறது என்றும் ,இதனால் மாநில அரசு சார்பில் மாவட்ட ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காமல் இருந்து வரும் திமுக அரசை கண்டித்து தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று துணைத் தலைவர் ராஜபாண்டியன் திமுக அரசை கண்டித்து தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறிய போது, அதற்கு திமுகவை சேர்ந்த 2கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தர். மேலும் செயல் அலுவலர் சிவக்குமார் கூட்டம் நிறைவு பெற்றதாக கூறினார். இதனால் இந்த கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


