மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வத்தலக்குண்டு ரோடு, பேரையூர் ரோடு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்று இந்த சாலை விரிவாக்க பணிக்காக எஸ்.ஓ.ஆர். நகர் எதிரே சாலையோரம் பள்ளம் தோண்டிய போது, உசிலம்பட்டி நகராட்சி பகுதிக்கு ஆண்டிபட்டி கணவாய் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி, பள்ளத்தில் தேங்கியும், சாலையிலும் சென்றது.


உடனடியாக குடிநீர் திறப்பு நிறுத்தப்பட்டிருந்தாலும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் வீணாகிய சம்பவத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை விரைந்து சரி செய்து தடையின்றி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி ஆணையாளர் இளவரசு தெரிவித்தார்.




