• Mon. Sep 22nd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சப்பரத்தை நடுவில் வைத்து சாலை மறியல்..,

ByKalamegam Viswanathan

Sep 21, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது புனித ஜெர்மன் அம்மாள் திருத்தலம். இந்த திருத்தலத்தில் நடைபெறும் தேர் பவனி பிரசித்தி பெற்றது இந்த திருத்தலத்தின் அருகே திருத்தலத்திற்கு சொந்தமாக இரு வீடுகள் உள்ளது.

அந்த வீடுகளை தனி நபர்கள் இருவர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருவதாக தெரிகிறது. அதனை கண்டித்தும் ஆக்கிரமிப்பு செய்தவர்களை உடனடியாக அப்புறப்படுத்த கோரியும், ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு உடனடியாக இருக்கும் திருச்சபை ஊழியர்களை கண்டித்தும் சோழவந்தான் நகரி சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேர் பவணியில் வரும் சப்பரத்தை சாலையின் நடுவில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவந்தான் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழக வெற்றி கழகத்தின் ஒன்றிய நிர்வாகி வழக்கறிஞர் தியாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்