காரைக்கால் மாவட்டம் விடுதியூர் காமராஜர் நகரை சேர்ந்த கருப்பையா (38) காரைக்கால் ஓஎன்ஜிசியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். நேற்று உறவினரின் இறப்புக்கு சென்று திருப்பட்டினத்தில் இருந்து வீடு திரும்பிய போது விடுதியூர் கன்னி கோயில் தெரு அருகே இவர் வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்து விபத்துக்குள்ளாகி உள்ளார்.
அவர் மீது வாகனத்தை மோதியவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றதாகவும் விபத்தை கண்ட மற்றவர்கள் விபத்துக்குள்ளான கருப்பையாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போக்குவரத்து போலீசார் விபத்துக்கு உள்ளாக்கிய நபர் மீது வழக்குப் பதியாமல் விபத்துக்குள்ளான கருப்பையா மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த கருப்பையா மீது போடப்பட்ட FIR-ஐ மாற்ற வலியுறுத்தியும் கருப்பையாவின் உறவினர்கள்
காரைக்கால் காமராஜர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தின் போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளரின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.