• Thu. Mar 23rd, 2023

இலங்கையில் எகிறும் பொருட்களின் விலை

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருளின் விலையேற்றம் உட்பட முக்கிய பிரச்சினைகளை மையப்படுத்தி – அதனை கண்டித்து நாட்டின் பிரதான நகரங்களில் மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) ஆர்பாட்டங்களை நடத்தவுள்ளனர்.


அதன்படி குறித்த ஆர்ப்பாட்டங்களை இன்றும், நாளையும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இன்றைய தினம் மகரகம, கிரிபத்கொட, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, தம்புள்ளை, நீர்கொழும்பு, அநுராதபுரம் மற்றும் கினிகத்தேனை ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.


மேலும் பதுளை, திருகோணமலை, பாணந்துறை, குருநாகல் மற்றும் சிலாபம் உள்ளிட்ட மேலும் சில நகரங்களில் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *