ஆன்மீக தலங்களில் அத்துமீறும் ரிலீஸ் அட்ரா சிட்டி கொந்தளிக்கும் பக்தர்கள்…
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ரீல்ஸ் முகம் தற்பொழுது கள்ளழகர் கோவிலும் விட்டு வைக்கவில்லை போட்டோ சூட் என்ற பெயரில் சில ஸ்டூடியோக்களால் ஆன்மீகத் தளங்களின் புனித தன்மை கெட்டுப் போகும் அளவிற்கு ரீல்ஸ் ஆனது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக புதுமண தம்பதி ஒருவர் மதுரையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மதுரை கள்ளழகர் பெருமாள் கோவில் பதினெட்டாம்படி கருப்புசாமி கோவில் அருகே கள்ளழகர் ராஜகோபுரம்
எதிரே ஒரு தம்பதியினர் கையில் மது இருப்பது போன்றும் மற்றொன்றில் தண்ணீர் இருப்பது போன்றும் ரிலீஸ் செய்யப்பட்டு, அது தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதை பார்த்த பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளார்கள். ரீல்ஸ் செய்வதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? அதுவும் இதுபோன்ற மது அருந்துவது போன்ற காட்சிகள் பக்தர்கள் மனதை மிகவும் வேதனைப்படுத்துவதாக பக்தர்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளார்கள். இது போன்ற சம்பவங்களை கோவில் நிர்வாகங்கள் கட்டாயம் தடுத்து நிறுத்த வேண்டும். கோவில் புனித தன்மையை காக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாகவே உள்ளது. கோவிலின் புனித தன்மை காக்கப்படுமா? இது போன்ற ரிலீஸ் மற்றும் போட்டோ சூட்டுகள் தடுக்க கோவில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரும் உடைய எதிர்பார்ப்பாகவே உள்ளது.

