• Tue. Dec 10th, 2024

தமிழர்களின் புரட்சி நாளில் புரட்சித் தமிழர் கட்சி துவக்க விழா

Byகுமார்

Jul 6, 2023

கரும்புலிகள் நாளில் தமிழர்களின் புரட்சி நாளில் புரட்சித் தமிழர் கட்சி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

மதுரையில் மதிச்சியம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண அரங்கத்தில்
கரும்புலிகள் நாளில் தமிழர்களின் புரட்சி நாளில் புரட்சித்தமிழர் கட்சி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த துவக்க விழாவிற்கு கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ராமன் பகடை தலைமையிலும் மாநில பொதுச் செயலாளர் அறிவழகன் மாநில அமைப்பு செயலாளர் புரட்சிகுமார் மாநில இளைஞரணி செயலாளர் மாதைசாக்கியன் முன்னிலையிலும் கட்சியின் நிறுவன தலைவர் அருந்தமிழ்அரசு சிறப்புரை ஆற்றி கட்சியின் பெயரை அறிமுகம் செய்து துவக்கி வைத்தார். தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர் விழாவில் போடப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் தலைவர் அருந்தமிழ்அரசு கூறியது.
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களின் மாநில அரசுபதிவிகளிலும், மத்திய அரசு பதவிகளிலும், தமிழர்களையே நியமித்திட வேண்டும் என ஒன்றிய அரசையும், தமிழகஅரசையும் புரட்சித் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
கேரளா மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும்மாவட்டமான இடுக்கி, பீர்மேடு, தேவிகுளம், மூணார் உள்ளிட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணையை தண்ணீர் தேக்க அளவை 152 அடி உயர்த்திடவும், அணையை பாதுகாத்திடும் முழுஉரிமையையும் தமிழகத்திற்கே வழங்கிட வேண்டும் எனஒன்றிய அரசை புரட்சித் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
தமிழக பள்ளி கல்வித் துறையின் அனுமதியுடன் செயல்படும்தனியார் பள்ளிகளிலும், அரசு பள்ளிகளிலும் உள்ள சாதிப்பெயரை நீக்கிடவும், வணிகங்கள், தெருப்பெயர்கள், ஊர்பெயர்களில் உள்ள சாதி அடையாளங்களை நீக்கி பொதுவான பெயர்களை வைத்திட வேண்டும் என தமிழக அரசை புரட்சித் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
பெண்களை, சிறுவர், சிறுமியர்கள் மீது தொடரும் பாலியல்வன்முறை குற்றங்களை தடுத்து அவர்களை பாதுகாத்திடும் வகையிலும், பாலியல் வன்முறை குற்றவாளிகளை தண்டித்திடும் வகையிலும் சிறப்பு கவன ஈர்ப்பு சட்டம்கொண்டு வர வேண்டும் எனவும் புரட்சித் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் சாமானிய மக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்துகின்ற B.J.P, R.S.S கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறைப்படுத்தி மக்களைஉச்சநீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து நீதி விசாரணை நடத்திடு! என வலியுறுத்துகிறோம்.
சாதிய ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்திட தனிசட்டம் இயற்றிட வேண்டும், அதற்கு தனி நீதிமன்றம் அமைத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்துபஞ்சமி நிலங்களை உரிய பயனாளிகளுக்கு ஒப்படை செய்திட தனி ஆணையம் அமைத்திட வலியுறுத்துகிறோம்.
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை சமூக நீதி அடிப்படையில்3% ல் இருந்து விகிதாச்சார அடிப்படையில் அருந்ததியர் மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறிட 6% உயர்த்திவழங்கிட வலியுறுத்துகிறோம்.