தமிழகத்தில் குடிமை பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திமுக அரசு 100 சதவீதம் தோல்வி அடைந்து விட்டது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டாக தெரிவித்திருக்கிறார்.
இது பற்றி முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நமது அரசியல் டுடே -க்கு அளித்த பேட்டியில்..,
தமிழகத்தில் குடிமைப் பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கண்ணீர் வடித்து வேதனையில் உள்ளனர். கடந்த ஜனவரி, பிப்ரவரி 2 மாதத்தில் சிவில் சப்ளை சிஐடி பிரிவில் உள்ள அதிகாரிகள் 35 லட்சம் மதிப்பில் உள்ள 1.7 லட்சம் கிலோ அரிசி, பாமாயில், பருப்பு ஆகியவற்றை சோதனை நடத்தி பறிமுதல் செய்துள்ளனர்.
அதை தொடர்ந்து மார்ச் மாதத்தில் 1.06 கோடி மதிப்பில் உள்ள அரிசி பாமாயில் ,பருப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
தினந்தோறும் குடிமை பொருட்கள் கடத்தாத நாட்களே இல்லை. இதன் குடிமை பொருட்கள் தடுப்பதில் 100 சதவீதம் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது.
புரட்சித்தலைவி அம்மா ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வண்ணம் மாதம்தோறும் 20 கிலோ அரிசி திட்டத்தை கொண்டு வந்தார்கள். இந்த கடத்தல் மூலம் இந்த திட்டம் மக்களுக்கு பயன் அளிக்கவில்லை தற்போது குடிமை பொருள் கடத்தல் தொடர்ந்து நீடித்தால் மக்களே வீதிக்கு வந்து போராடும் நிலை உருவாகும் என கூறினார்.