சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் செங்காடு கிராமத்தை ஆட்சி செய்து வரும் ஆங்கிலேயரான ராபர்ட் கிளைவ் (ரிச்சர் ஆஸ்டன்) அங்கிருக்கும் மக்களை கொடூரமாக சித்ரவதை செய்து வேலை வாங்குகிறார். அவரது மகன் ஜஸ்டின் (ஜேசன் ஷா) அக்கிராமத்தில் பருவமடைந்த பெண்களை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு பயந்து அவ்வூர் ஜமீன்தார் தனது மகள் இறந்துவிட்டதாக பொய் சொல்லி வீட்டில் வைத்து வளர்க்க, ஒருநாள் உண்மை வெளிச்சமாகிறது. இதைக் கண்ட ஜஸ்டின், ஜமீன்தார் மகளை அடைய நினைக்க, தனது காதலியான அந்தப் பெண்ணை பாதுகாக்க போராடுகிறார் பரமன் (கௌதம் கார்த்திக்).
இறுதியில் பரமன் அந்தப் பெண்ணை காப்பாற்றினாரா? இல்லையா? கிராம மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த செய்தியை எதற்காக, யார் மறைத்தார்கள்? இதுதான் படத்தின் திரைக்கதை.
வெயில் மனிதர்களின் பழுப்பேறிய முகங்களையும், சுடுமண் தரையின் சூட்டோடு கொதிக்கும் நீரில் தூக்கி வீசப்படும் அவலத்தையும், எதிர்த்து எழும் குரல்கள் இரக்கமற்று கழுவேற்றப்படும் நிகழ்வுகளின் வழியே பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இந்தியாவின் நிலையை கற்பனைக் கலந்து காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் என்.எஸ்.பொன்குமார்.
யதார்த்தத்திற்கு நெருக்கமான மறைந்த கலை இயக்குநர் டி.சந்தானத்தின் கலை அமைப்பு உண்மையான கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. சிகை அலங்காரத்தின் மிகையற்ற தன்மை கிராமத்து மக்களின் சாயலை வரித்துக்கொள்வதால், செங்காடு மக்களுடன் திரையில் உறவாடும் உணர்வு எழுவது ஆகச் சிறப்பு.
குறிப்பாக டிஎஸ்ஆர் தர்மராஜ் காதில் பூட்டு போன்ற காதணி ஒன்றை அணிந்திருக்கும் காட்சி பீரியாடிக் படத்திற்கான அத்தாட்சி.
‘கொட்டுங்கடா’ பாடலில் தெறிக்கும் புழுதியால் ஏசி திரையரங்கிலும் கண்களில் தூசு தட்டுவது ஒளிப்பதிவாளர் செல்வகுமாரின் லென்ஸ் செய்யும் மாயம். அழகியலை கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து பேசும் இரவுக் காட்சியில் சுற்றியிருக்கும் தீப்பந்தத்தின் ஒளியை உள்வாங்கி ப்ரேமை செதுக்கியிருக்கும் விதம் ஒளிப்பதிவில் இதம் சேர்க்கிறது. ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் மனதில் தேங்கவில்லை என்றாலும், பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.
இறுதியில் வரும் ‘வந்தே மாதரம்’ ஈர்ப்பு.இயல்பு கலந்து நேர்த்தியான நடிப்பும் அதற்கான கௌதம் கார்த்தியின் உழைப்பும் திரையில் கவனம் பெறுகிறது. கிராமத்து மக்களில் ஒருவராகவும், அதற்கான உடல்மொழியும், சிகை அலங்காரமும், இறுதிக்காட்சியில் மக்கள் முன் அவர் பேசும் வசனமும், காதலிக்காக எந்த எல்லைக்கும் செல்லும் கதாபாத்திரத்தில் ‘பக்காவாக’ பொருந்துகிறார். இதுவரை பார்த்திடாத அழுத்தமான நடிப்பில் புகழ் அதகளம் செய்கிறார். பிரிட்டிஷ் அதிகாரி ராபர்ட் க்ளைவிடம் நடுங்கிக் கொண்டே பேசும் காட்சியிலும், கௌதம் கார்த்தியிடம் ஓடி வந்து ஒரு விஷயத்தை பகிரும் காட்சியிலும் தேர்ந்த நடிகராக மிளிர்கிறார்.அப்பாவி முகத்துடன் ஜமீன்தார் வீட்டுப்பெண்ணாக ரேவதியின் நடிப்பு கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறது. அதேசமயம் நடிப்பின் தேவையை சில காட்சிகள் அப்பட்டமாக்கிவிடுகின்றன. பிரிட்டிஷ்காரராக நடித்துள்ள ரிச்சர்ட் ஆஸ்டன் அட்டகாசமான நடிப்பில் கதாபாத்திரத்திற்கு தேவையான வெறுப்பை வாரிக்குவிக்கிறார். மகனாக வரும் ஜேசன் ஷா பொம்மையை போல இருந்தாலும் குறை சொல்ல முடியாத நடிப்பு. ஊர் மக்களின் நடிப்பில் அவ்வளவு யதார்த்தம்.
மொத்தத்தில், சுதந்திரம் கிடைத்தது குறித்து அறியாத கிராமம் என்ற சுவாரஸ்யமான ஒன்லைனை அழுத்தமாக எழுதிய காட்சிகள் நிறைவு. தேவைக்கு அதிகமாக இழுத்த காதல், க்ளைமாக்ஸ் உள்ளிட்ட இன்னும் சில காட்சிகள் ஏமாற்றம்.
- முடி சூட்டும் விழா முடிந்தது.. மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது.. ராகுல் காந்திமல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்பாஜக […]
- செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது -முதல்வர் மு .க ஸ்டாலின்.மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. என […]
- பேப்பர் மற்றும் மை விலையை கட்டுப்படுத்த வேண்டும்- மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் தீர்மானம்கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலையிணை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த […]
- புது நாடாளுமன்றம் திறக்கும் நாளில் நிலநடுக்கத்தால் குலுங்கிய தலைநகர் டெல்லிவரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், இன்று டெல்லி […]
- ரூ.75 நாணயம் கருப்பு நிறமாக இருப்பது ஏன்?இந்திய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு […]
- முதல் நாளே பிரச்சனை-புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் கைது
- உலகபட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 1000 பேருக்கு மதிய உணவுஉலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு […]
- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!..வெயில் படிப்படியாக குறையும்தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக […]
- மருத்துவகல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து-தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்மருத்துவக்கல்லூரிக்கான அங்கீராரம் ரத்து செய்யப்பட தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கே காரணம் என […]
- பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா ரத்து -ஏற்புடையதல்ல! – எஸ்.டி.பி.ஐ.மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல! – […]
- 2023 ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு..கோப்பையை வெல்லுமா சென்னை அணி?ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று இரவு மோதுகின்னறன. இன்றுடன் 2023 ஐபிஎல் […]
- மதுரையில் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்குமதுரை பாண்டிகோவில் பகுதியில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்கு- […]
- ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்ராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் – மரக்காணம் கள்ளச்சாராய […]
- இன்று இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு நாள்பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் […]
- கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழாகலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு […]