• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி 19இல் தொடங்க இருந்த நிலையில், கொரோனா மூன்றாம் அலை பரவலால் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, கொரோனா பரவல் குறைந்ததையடுத்து நாளை முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான அட்டவணையை மாற்றி தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

இதில், 10ஆம் வகுப்பிற்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு பிப்.9 – 15 வரை, 2ஆம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 – ஏப்.4 வரை, 12ஆம் வகுப்பிற்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு பிப்.9 – 16 வரை, 2ஆம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 – ஏப்.5 வரையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.