• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஓய்வில் இருக்கும் ராணி இரண்டாம் எலிசபெத்…

Byமதி

Oct 31, 2021

95 வயதான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த வாரம் வழக்கமான சோதனைகளுக்காக மருத்துவனையில் தங்கினார். அதன்பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வின்ஸ்டர் கோட்டைக்குத் திரும்பி ஓய்வெடுத்து வருகிறார். இதற்கிடையே, டாக்டர்கள் அளித்த பரிந்துரையை ஏற்று, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் அயர்லாந்து பயணத்தை ரத்து செய்தார்.

இந்நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணி இரண்டாம் எலிசபெத் மேலும் 2 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால் ராணி அலுவலக பயணங்கள் எதுவும் மேற்கொள்ள மாட்டார் என தெரிவித்துள்ளது.