

நடிகர் புனித் ராஜ்குமார் உயிரிழந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர் ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள மரூர் கிராமத்தைச் சேர்ந்த புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர் பரசுராம் தேவம்மன்வார் என்பவர், அவரின் மரண செய்தியை கேட்ட அதிர்ச்சியில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
நடிகர் புனித்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
அவரது உடலுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராணா டகுபதி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் பிரபுதேவா, அர்ஜுன் உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். பொதுமக்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
