மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கஃபே மூடப்படுவதாகப் பத்திரிக்கை செய்தி வெளிவந்தது. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கஃபே மூடப்படுவதாக வந்துள்ள செய்தி உண்மையல்ல. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கேப் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையரக அலுவலகத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக, சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் முதல் தளத்தில் செயல்பட்டு வந்த மியூசியம் கஃபேவை இடமாற்றம் செய்வதற்கான திட்டமும் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. எந்த இடத்திற்கு மியூசியம் கஃபே மாற்றப்படும் என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதால், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இந்த விவகாரம் பேசு பொருளானது. கடந்த 2022 ஆம் ஆண்டு, மாற்றுத் திறனாளிகளால் இயங்கும் பிரத்தியேக நவீன உணவகத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தவர். இப்படியிருக்க, மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்திற்காகத் திறந்துவைக்கப்பட்ட ஒன்றை அரசே மூடலாமா என்று பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தன.

இந்நிலையில், இந்தப் பிரச்சினையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலையிட்டு, மியூசியம் கஃபே இடமாற்றத் திட்டத்தைத் தலைமையிடம் பேசி தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கனிமொழி கருணாநிதி எம்.பி., தனது சமூக வலைத்தள பக்கத்தில், மியூசியம் கஃபே மூடப்படுகின்றது என்ற செய்தி தவறானது என்பதை அறிந்து மகிழ்கிறேன். அது தொடர்ந்து செயல்பட்டு வருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதை அப்படியே நிலைநிறுத்த அனைவரும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எனது நன்றிகள்.” என்று பதிவிட்டுள்ளார்.









