விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வ உ சி கலையரங்கத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வடக்கு நகர செயலாளர் வழக்கறிஞர் துறை முருகேசன் தலைமையில் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான கே டி ராஜேந்திர பாலாஜி கலையரங்க வளாகத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி திமுக அரசு மக்கள் பணி எதுவும் செய்யாமல் பிறர் மீது குற்றம் சாட்டையே ஆட்சியையும் ஆட்சியும் நடத்தி வருகிறது திமுக ஆட்சியில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சியின் அவல நிலைகளை மக்களிடம் எடுத்துக் கூறி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற நீங்கள் வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து மக்களிடம் திமுக ஆட்சியின் அவல நிலை எடுத்து கூறி அதிமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டுமென பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி முகாமில் சிறப்புரையாற்றினார்.

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கே எம் கோபி பயிற்சி அளித்தார் நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என் எம் கிருஷ்ணராஜ் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக . இனை செயலாளர் அழகுராணி அகிலஉலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் எஸ்.என் பாபுராஜ் .தெற்கு நகர செயலாளர் பரமசிவம் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் செட்டியார் பகுதியில் செட்டியார்பட்டி பேரூர் கழகச் செயலாளர் அங்குதுரை பாண்டியன் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான கட்சித் தொண்டர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்