• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அடிப்படை தேவைகளை நிறைவேற்றாவிட்டால் ஓராண்டில் ராஜினமா! – வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் சுயட்சை வேட்பாளர்

Byகுமார்

Feb 12, 2022

மதுரை மாநகராட்சி 3வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் விமான பொறியாளர் ஜாபர் ஷெரிப் 3வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பின்போது பத்து முக்கிய வாக்குறுதி துண்டு பிரசுரங்களில் வாக்காளர்களுக்கு அளித்திருப்பதாகவும் வார்டில் உள்ள அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாவிட்டால் வேட்புமனு தாக்கல் தேதியான 2.2.2022 அன்று முதல் 2.2 .2023 ஓர் ஆண்டின் முடிவில் ராஜினாமா செய்வேன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

மேலும் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறி விதைகளை மக்களுக்கு வழங்கி அந்த மரங்கள் செடிகள் ஐந்து ஆண்டுகளில் எவ்வாறு பலனைக் கொடுக்குமோ அதே போல நானும் இந்த ஐந்தாண்டுகளில் முன்மாதிரியான வார்டாக மாற்றி அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து காட்டுவேன் என்று உறுதியளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.