• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கடல்பகுதியில் சிக்கித்தவித்த 11 மீனவர்கள் மீட்பு

ByA.Tamilselvan

May 10, 2022

ஒடிசா அருகே கடல்பகுயில் சிக்கியிருந்த 11மீனவர்களை இந்திய கடலோரக் காவல்படை பத்திரமாக மீட்டது.
தற்போது வங்க கடலில் மையங்கொண்டுள்ள அசானி புயல் காரணமாக ஆந்திர . ஒரிசா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. மீனவர்கள் மீன்பிடிக்கசெல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே ஒடிசா கஞ்சம் மாவட்டம் கோபால்பூர் கடல்பகுதியில் சிக்கித்தவித்த 11 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். வேக மாக வீசும் காற்று மற்றும் புயல்காரணமாக கரைதிரும்ப முடியாத நிலையில் சிக்கியிருந்த மீனவர்களை கடுமையான போராட்டத்திற்குப் பிறகு இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர்.மீட்கப்பட்ட பிறகு மீனவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.