• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உக்ரைனிலிருந்து மீட்பு விமான சேவை நிறுத்தம்…

Byகாயத்ரி

Mar 11, 2022

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடந்த 15 நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கடந்த சில நாட்களாக மத்திய அரசு சிறப்பு விமானங்களை அனுப்பி வைத்தது.

மேலும், உக்ரைனில் இருந்து மீட்பு விமான சேவை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உக்ரைனில் இருந்து கடைசி விமானம் நேற்று தாயகம் திரும்பியது. சுமி என்ற பகுதியில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் அந்த விமானத்தில் தாயகம் திரும்பினர். இதையடுத்து, இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியபோது, “இனிமேல் மீட்பு விமான சேவை வழங்கப்படாது.இந்தியர்கள் யாராவது உக்ரைனில் இருந்தால் அவர்கள் தங்கள் சொந்த செலவிலேயே தாயகம் திரும்ப வேண்டும்” என்று தெரிவித்தார்.