• Fri. Apr 26th, 2024

உக்ரைனிலிருந்து 10 லட்சம் குழந்தைகள் வெளியேற்றம் – யுனிசெஃப்

உக்ரைனில் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக யுனிசெஃப் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய இயக்குனர் அப்ஷான் கான் கூறுகையில்,
நாட்டை விட்டு வெளியேறிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் நிலைமை எவ்வளவு அவநம்பிகையானது என்பதை இது காட்டுகிறது.
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யுனிசெப் உதவி வருகின்றது. இதுவரை, கிட்டத்தட்ட 70 டன் பொருட்களுடன் ஆறு டிரக்குகள் உக்ரைனுக்கு வந்துள்ளன. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு கருவிகள் இதில் அடங்கும்.
உக்ரைனின் மோதல்களால் பாதிக்கப்பட்ட 5 வெவ்வேறு பகுதிகளில் உள்ள 22 மருத்துவமனைகளில் உள்ள 20,000 குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்குப் பயனளிக்கும் வகையில் மருத்துவப் பொருட்களை விநியோகிக்கப்பட்டுள்ளது.
போர் பதற்றத்தின் காரணமாக பெரும்பாலானோர் குடும்பத்துடன் போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, மால்டோவா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக யுனிசெஃப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றது.
குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு எங்களால் முடிந்த அனைத்தை உதவிகளையும் நாங்கள் செய்கிறோம், ஆனால் போர் முடிவுக்கு வர வேண்டும். அமைதி மட்டுமே நிலையான தீர்வு என்று கான் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *