முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர்
மதுரை
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மதுரை மாவட்டத்தில் எழுச்சி பயணத்தை மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து மதுரை மாநகர், மதுரை புறநகர் மேற்கு, மதுரை புறநகர் கிழக்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் எழுச்சி பயணத்திற்கு உரிய அனுமதியும், தேவையான விளம்பரங்கள் செய்திடவும், ஒலி ஒளி அமைத்து கொள்ளவும், தகுந்த பாதுகாப்பு வழங்கவும் மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள உதவி ஆணையாளரிடம் (நுண்ணுறிவு பிரிவு) மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், செல்லூர் கே ராஜு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ,மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி வி ராஜன் செல்லப்பா ஆகியோர் கூட்டாக மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் செல்லூர் கே ராஜூ கூறியதாவது :
இன்றைக்கு புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் எடப்பாடியார் சிறப்பாக இயங்கி வருகிறார். எடப்பாடியார் செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்து, எங்களுக்கு தேவையான கோரிக்கை நிறைவேற்றி தர வேண்டும் என்று இப்போதே கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து வருகின்ற 1ம் தேதி முதல் 4 ம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் 10 தொகுதியில் எடப்பாடியார் எழுச்சி பயணத்தை மேற்கொள்கிறார் ,1 ம் தேதி அன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 16ம் கால் மண்டபத்திலும் ,அதனை தொடர்ந்து திருமங்கலம் தொகுதி சார்பில் டி.குன்னத்தூர் அம்மா கோயிலில் எழுச்சிப் பயணத்தை மேற்கொள்கிறார்.
2ம் தேதி மாலை மேலூர் தொகுதியில், மேலூர் பேருந்து நிலையத்திலும், அதனை தொடர்ந்து கிழக்கு தொகுதியில் ஒத்தக்கடையிலும், மதுரை வடக்கு தொகுதியில் உள்ள புதூர் பேருந்து நிலையத்திலும் எழுச்சி பயணத்தை மேற்கொள்கிறார் .

இதனைத் தொடர்ந்து 3ம் தேதி அன்று மதுரை மேற்கு தொகுதியில் உள்ள பழங்காநத்தம், அதனை தொடர்ந்து மதுரை மத்திய தொகுதியில் மைனா தெப்பக்குளம் ,தெற்கு தொகுதியில் தினமணி தியேட்டரில் அருகே எழுச்சி உரையாற்றுகிறார்.
4ம் தேதி சோழவந்தான் தொகுதியில் வாடிப்பட்டி பேருந்து நிலையம், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் தி.விலக்கில்எழுச்சி உரையாற்றுகிறார்.
இன்றைக்கு அதிமுகவிற்கு என்று கொள்கை உள்ளது. வாரிசு அரசியலை ஒழிக்கவும், லஞ்சம் லாவண்யம் இல்லாத, ஊழல் இல்லாத அரசை உருவாக்கி தர வேண்டும் என்று புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தை தோற்றுவித்தார். எம்ஜிஆர் இருக்கும் பொழுது 17 லட்சம் தொண்டர்கள் இருந்தார்கள், அம்மா இருக்கும்போது ஒன்னரை கோடி தொண்டர்கள் இருந்தார்கள், தற்போது எடப்பாடியார் 2 கோடி தொண்டர்களை உருவாக்கியுள்ளார்.
இன்றைக்கு புரட்சித் தலைவரை எல்லோரும் வாரிசு என்று கூறுகிறார்கள், ஸ்டாலின் கூட பெரியப்பா என்று கூறுகிறார், விஜயகாந்த் கூட தன்னை கருப்பு எம்ஜிஆரின் என்று கூறினார் ஆனால் மக்கள் அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைக்கு புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தலைவர் ஆகியோரின் வாரிசாக எடப்பாடியார் உள்ளார்.
இன்றைக்கு ஒருவர் மாநாட்டை நடத்தி விட்டு ,பாஸ்ட்புட் மாதிரி நேரடியாக முதலமைச்சர் என்று கூறுகிறார், அவர் அரசியலில் நிறைய பாடம் படிக்க வேண்டி உள்ளது எம்ஜிஆர் மாதிரி அவர் தன்னை ஒப்பிடுது தவறு.
இன்றைக்கு எடப்பாடியார் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ,அமைச்சர், முதலமைச்சர், பொதுச்செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்து உள்ளார் .மக்கள் தீர்ப்பே, மகேஷ் தீர்ப்பு என்பது போல எடப்பாடியார் 2026 ஆண்டில் முதலமைச்சர் வருவார் என கூறினார்.
இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் சரவணன், அண்ணாதுரை, கே தமிழரசன் ,கே.மாணிக்கம், எம்.வி. கருப்பையா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்டக் கழக நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, பா.குமார், சி.முருகன்,கே.சந்திரன், மாநில நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், தனராஜன், வெற்றிவேல், வக்கீல் சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கோட்டைகாளை, ஒத்தக்கடை சேனாபதி, பார்த்திபன், செல்லம்பட்டி ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் சக்தி மோகன், விளாங்குடி திரவியம், சுதாகரன், பகுதிகழக செயலாளர்கள் தளபதி மாரியப்பன், வக்கீல் அசோகன், வக்கீல் தமிழ்ச்செல்வன்,சக்தி விநாயகர் பாண்டியன் மற்றும் பாண்டுரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








