விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் சத்திரப்பட்டி கிராமத்தில் இருந்து கங்கர் சேவல் கிராமத்திற்கு நான்கு கிலோமீட்டர் தூரம் செல்லும் சாலை கடந்த 50 ஆண்டுகளாக மண்சாலையாக உள்ளது.

இப்பகுதியில் 15 பட்டாசு ஆலைகள், இரண்டு கம்பி மத்தாப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான குடோன்கள் இரண்டு உள்ளது. மேலும் ஏராளமான ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களும் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மண் சாலைகள் சகதி காடாக மாறிவிட்டது . இதனால் மோட்டார் சைக்கிள்கள், நான்கு சக்கர வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. பட்டாசு தொழிற்சாலைக்கு செல்லக்கூடிய தொழிலாளர்கள்,விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய விவசாயிகள் நடந்துதான் சென்று வர வேண்டிய நிலை. டிராக்டர்கள் செல்ல முடியாததால் விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகளும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் பட்டா சாலையில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் காயம் பட்டவர்களை மீட்பதற்கு ஆம்புலன்ஸ் வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மன்சாலையை கிராம சாலை திட்டத்தில் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




