தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, காமயகவுண்டன்பட்டி, வாய்க்கால் தெரு. 15 வது வார்டு பகுதியில், குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் டாஸ்மாக் கடை திறப்பதை தடுத்து நிறுத்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருக்கும் பகுதியில் வீட்டில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான குடும்பத்தினர் கூலி வேலைக்கு செல்பவர்கள், காலையில் வேலைக்கு சென்று மாலையில் தான் வீடு திரும்புவார்கள்.
குழந்தைகள் பள்ளி சென்று மாலை வேலையில் தான் வீடு திரும்புவார்கள். குடியிருப்பு பகுதியில் மது கடை திறப்பதால் அடிக்கடி இங்கு வன்முறைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாய்க்கால் தெரு வழியாகத்தான் அனைத்து சமுதாய மக்களும் சுடுக்காட்டுச் செல்ல வேண்டும். இந்த இடத்தில் மதுக்கூடம் இருந்தால் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ முடியாது.
ஆகவே மதுக்கடையினை வேறு குடியிருப்பு இல்லாத இடத்திற்கு மாற்றி ஏற்பாடு செய்ய வேண்டும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனாவிடம் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)