இரண்டாம் ஆண்டு தாயாரின் நினைவாக ஏழை, எளிய மாணவிகளுக்கு பொறியாளர் ஆர். எஸ். வேலர் அரிசி, சர்க்கரை, தலா 2000 ரூபாய் வழங்கினார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பொறியாளர் வேலர், தாயார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவரின் நினைவாக இன்று போடிநாயக்கனூர் தனியார் திருமண மண்டபத்தில் பொறியாளர் ஆர். எஸ். வேலர் தாயார் மகாலட்சுமி இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட ஏழை எளிய, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையாக தலா ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 2000, புத்தகம் மற்றும் அரிசி, சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
தாயாரின் நினைவாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பொறியாளர் வேலர் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.