விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்துசாமிபுரத்திலிருந்து ராமுதேவன்பட்டி வழியாக செல்லும் தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக மாறிவிட்டது.

இதனால் இதன் வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். ஆகையால் தார் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன் பேரில் முத்துச்சாமிபுரத்திலிருந்து ராமுதேவன்பட்டி வழியாக இரண்டு கிலோமீட்டர் செல்லும் தார் சாலை புதுப்பிக்கப்பட்டது. ஆனால் தார் சாலையின் இரண்டு புறங்களிலும் போதுமான அளவு சரளை மண் போடபடாமல் உள்ளது.
இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை உள்ளது. மேலும் மழைக்காலங்களில் பக்கவாட்டில் சரளை மண் போடப்படாததால் தார் சாலை சேதமடைய வாய்ப்புள்ளது. ஆகையால் ரோட்டில் இரண்டு புறங்களிலும் சரளைமண் போட்டு சமமப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.