சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் வழியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் சரியாக வெடிக்கிறதா என்பதை சரி பார்க்க பட்டாசு ஆலையில் உற்பத்தி முடிந்து 5 மணிக்கு மேல் ஆலையில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும் பட்டாசுகளை வெடித்து பார்க்க வேண்டும் என்பது விதிமுறை.

ஆனால் இப்பகுதியை சேர்ந்த பட்டாசு ஆலையில் தயார் செய்யப்பட்ட பட்டாசுகளை பேர் நாயக்கன்பட்டி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் வைத்து பட்டாசுகள் சரியான முறையில் வெடிக்கிறதா என்பதை ஆபத்தான முறையில் தொழிலாளர்கள் பட்டாசுகளை வெடித்துப் பார்க்கின்றனர். இதில் விபத்து ஏற்பட்டால் தொழிலாளி காயமடைய வாய்ப்புள்ளது. மேலும் விவசாய தோட்டமும் சேதமடைய வாய்ப்புள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயத் தோட்டத்தில் மாதிரி பட்டாசுகள் வெடிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.





