மலை கிராமத்தில் தங்கி இருந்து பணி செய்யும் நிரந்தர கிராம நிர்வாக அதிகாரியை பணி அமர்த்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலை கிராமமான மணலூர் ஊராட்சியில் தற்போது அய்யம்பாளையத்தில் கிராம நிர்வாக அதிகாரிகளாக உள்ள காளிதாஸ் கூடுதல் பொறுப்பாக மணலூர் ஊராட்சி கிராம நிர்வாக அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.


மணலூர் ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட உள் கிராமங்கள் உள்ளன இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரியை சந்திக்க வேண்டும் என்றால் மழையை விட்டு கீழே இறங்கி போய் சந்திக்க முடியாது அதே போல் மற்றொரு பகுதியில் பணி அமர்த்தபட்ட கிராம நிர்வாக அதிகாரி ஒரு சில நாட்களுக்கு மட்டுமே தான் இப்பகுதிக்கு வர முடியும் பேரிட காலங்களில் கிராம நிர்வாக அதிகாரியை உடனடியாக தொடர்பு கொள்ள முடியாது ஆகவே நிரந்தர கிராம நிர்வாக அதிகாரி பணியமர்த்த வேண்டும் மேலும் மணலூர் ஊராட்சியிலேயே தங்கி இருந்து பணி செய்யும் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தால் மலை கிராம மக்களுக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நிரந்தர கிராம நிர்வாக அதிகாரியை பணிய அமர்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.




