• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சாலை உடைப்பு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்..,

2022 ஆம் ஆண்டு பாரத பிரதமர் மந்திரி கிராம சாலை திட்டத்தில் வீரபாண்டியபுரம் டு முத்துக்குமாராபுரம் டு குளத்தூர் வரை போடப்பட்ட சாலையில் கே கே எம் வாகனம் கல் சரல் கோரி அமைத்து கனரக வாகனத்தில் 30 டன் முதல் 60 டன் வரை லோடு எடுத்துச் செல்வதால் தற்போது இந்த சாலை முற்றிலும் உடைந்து விட்டது. எனவே அந்த கல் கோரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் கே கே எம் கல்குவாரி கொல்லம்பரம்பு சந்திரகிரி கிராமத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்படாமல் இந்த கோரி செயல்படுகிறது எனவே இந்த கோரிய உடனடியாக மூட வேண்டுதல்.

வணக்கம் நான் தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவராக செயல்பட்டு வருகிறேன் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் சந்திரகிரி கொல்லம் பரம்பு கிராமத்திற்கு அருகே KKM என்ற நிறுவனம் கல் கோரி மற்றும் எம் சாண்ட் விற்பனை செய்து தயாரித்து வருகிறது. இந்த கல்குவாரி கிராமப் பகுதியில் அமைந்திருக்கிறது இதனால் இந்த சுற்று வட்டார கிராம மக்களுக்கு மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த கல் கோரியில் வெடி மருந்து கொண்டு கல் அகற்றப்படுகிறார்கள் அரசின் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிகமான ஆழம் தோண்டி கல் எடுக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இந்த கல் கொரியால் இந்த பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களும் சுற்றுச்சூழலால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். தற்போது இந்த கல் கோரியில் செயல்பட்டு வரும் வாகனம் வண்டியில் அளவிடப்பட்ட அளவைவிட சுமார் 30 டன் 40 டன் கனரக வாகனத்தில் லோடு ஏற்றி வீரபாண்டியபுரம் முள்ளூர் குளத்தூர் குறுக்கு சாலை கொல்லம் பரம்பு இந்த சாலைகள் அனைத்திலும் அதிக பாரம் ஏற்றி முற்றிலுமாக சாலையை உடைத்து விட்டது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாரத பிரதமர் மந்திரி கிராம சாலை திட்டத்தில் போடப்பட்ட வீரபாண்டியபுரம் முள்ளூர் குளத்தூர் மற்றும் கொல்லம் பரம்பு சந்திரகிரி சாலை முற்றிலும் உடைந்து நாசமாகிவிட்டது. எனவே இந்த சாலைகளை மீண்டும் புதியதாக போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பாரத பிரதமர் அவர்கள் திட்டத்தில் போடப்பட்ட சாலை 2027 ஆம் ஆண்டு வரை ஒப்பந்தக்காரர் பராமரிப்புச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஒப்பந்தக்காரர் இந்த சாலையை பராமரிக்கவில்லை இந்த கிராம சாலையில் 40 டன் முதல் 60 டன் லோடு ஏற்றி வரும் வாகனங்கள் மீது குளத்தூர் காவல்துறை சார்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே உடனடியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இந்த சாலையை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பாக வேண்டுகோள் வைக்கப்படுகிறது.