• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிவகாசி மைனாரிட்டி எஜிகேசன் டிரஸ்ட் சார்பாக குடியரசுதினவிழா

Byதரணி

Jan 26, 2023

சிவகாசி மைனாரிட்ட எஜிகேசன் டிரஸ் சார்பாக 74 வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்தியா முழுவதும் 74 வது குடியரசு தினவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதே போல தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ,தனியார் நிறுவனங்களில் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவகாசி மைனாரிட்டி எஜிகேசன் டிரஸ்ட் சார்பாக குடியரசுதினவிழா அறக்கட்டளையின் நிறுவனர் டி. செய்யது ஜாஹிர் உசேன் தலமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் செயலாளர் கே.ரஹ்மத்துல்லா, பொருளாளர் எம்.மாபு பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அறக்கட்டளையின் கெளரவ ஆலோசகர் தாதாமியான் வாழ்த்துரை வழங்கினார்.
இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் இ.செய்யது ஜஹாங்கீர் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை வழங்கினார்.மேலும் இந்நிகழ்ச்சிக்கு தேசிய லீக் நகர தலைவர் முகமது கான்,நகர செயலாளர் காசிம் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.