• Fri. Mar 29th, 2024

நீலகிரி – வண்ணாத்திவயல் பகுதியில் மாபெரும் கயிறு இழுத்தல் போட்டி

நீலகிரி மாவட்டம் சேரம்பாடியை அடுத்துள்ள வண்ணாத்திவயல் பகுதியில் போதை விழிப்புனர்வு வழியுறுத்தும் வகையில் மாபெரும் கயிறு இழுத்தல் போட்டி நடை பெற்றது….
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி வண்ணாத்திவயல் அருகே கோரஞ்சால் திருவள்ளுவர் நகர் அருகே ஸ்டார் திருமண மண்டபம் அருகே உள்ள மைதானத்தில் திருவள்ளுவர் கலை இலக்கிய விளையாட்டு சங்கம் நடத்திய போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமையில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது போதை பொருள் பழக்கம் அனைவர் மத்தியிலும் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் துவங்கி பெரியவர்கள் வரை அனைவருமே போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். குறிப்பாக கூடலூர் பாந்தலூர் உள்ளிட்ட பகுதிகளின் போதைப்பொருட்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த சூழல் காரணமாக பல மாணவர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாக விட்ட சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க பல்வேறு அமைப்புகள் சார்பாகவும் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


மேலும் இது தொடர்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, மாரத்தான் போட்டிகள் ஆகியவை நடத்தபட்டு வருகிறது.அந்த வகையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வை முன்னிறுத்தி இன்றைய தினம் நீலகிரி மற்றும் வயநாடு மாவட்ட அளவிலான மாபெரும் கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. போட்டியை கூடலூர் பொன் ஜெயசீலன் துவங்கிவைத்தார்
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் அனீபா மாஸ்டர், பந்தலூர் மேற்கு ஒன்றிய அதிமுக கழக செயலாளர் செல்வகுமார், ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் ஜெயகுமார், சங்க ஆலோசனை செல்வி ஆசிரியர் உள்ளிட்டோர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து சிறப்புரை ஆற்றினர்.
சேரங்கோடு ஊராட்சி துணை தலைவர் சந்திரபோஸ், ரவிச்சந்திரன், பிபின் தாஸ், ரமேஷ், சுந்தரராஜ், இலங்கோவன், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் போட்டியில் 25க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது .வெற்றி பெற்ற அணிகளுக்கு பண முடிப்பும் நினைவு கோப்பைகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *