• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

திருச்சிராப்பள்ளி காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் குடியரசு தினவிழா

ByJawahar

Jan 27, 2023

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் 74வது குடியரசு தின விழாவில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி .ந.தியாகராஜன் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். குடியரசு தின விழாவினை குறித்தும், பேரூராட்சியில் திட்டப்பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம், நெகிழி ஒழிப்பு திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்து பாராட்டினார். பேரூராட்சி மன்ற தலைவர் .சங்கீதா சுரேஷ் தேசியை கொடியை ஏற்றி வைத்தார். துணைத்தலைவர் சுதா சிவசெல்வராஜ் பணியாளர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்கள். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிவஜோதி, பானுமதி, சந்திரகலா,அன்னபூரணி, காயத்திரி, ராணி, விஜயா, இளஞ்சியம், ராஜ்குமார், இளநிலை உதவியாளர்கள் இராஜேந்திரன், சித்ரா, பாரதியார் வரித்தண்டலர்கள் சர்மிளா, சதாசிவம், துப்புரவு பணிமேற்பார்வையாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிவித்தனர். குடியரசு தினவிழாவினை முன்னிட்டு அலுவலக கட்டிடம் மின்னொளியால் அலங்காரம் செய்யப்படிருந்தது.