• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பாலமேடு சாத்தையாறு அணையில் பழுது பார்க்கும் பணி

ByN.Ravi

Jul 10, 2024

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை கடந்த சில ஆண்டுகளாக அனை நீர் முழு கொள்ளளவை எட்டிய போதிலும் சட்டர் பழுதால், அணை நீர் வீணாக வெளியேறியது. இதனால், விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இதன் காரணமாக, அப்பகுதிபாசன வசதி பெரும் 11 கிராம கண்மாய் பாசன விவசாயிகள் சட்டர் பழுதை விரைந்து சரி செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை சரிசெய்ய தமிழக அரசு ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அணையில் உள்ள
பழைய மூன்று சட்டர்களும் அகற்றப்பட்டு, ரூ.1 கோடியே10 லட்சம் மதிப்பீட்டில் மூன்று புதிய சட்டர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், பருவமழை தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பணிகள் விரைந்து முடிவு பெறும் பட்சத்தில் அணையில் மழைநீர் முழுவதுமாக தேக்கி வைக்கப்பட்டு விவாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படும் நேரத்தில் திறந்து விட சரியாக இருக்கும் எனவும், விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கை இதன் மூலம் நிறைவேறி உள்ளதாகவும் அப்பகுதி பாசன வசதி பெறும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.