கடந்த திமுக ஆட்சியில் மகளிர் விடியல் பேருந்து என தமிழக முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது தற்போது ஆட்சி மாற்றம் காரணமாக மகளிர் விடியல் பேருந்து என இத்தனை நாள் இயங்கி வந்தது. தற்போது மகளிர் மகளிர் பயணம் என பெயர் மாற்றம் செய்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்ட பொழுது மேலிடத்தில் இருந்து உத்தரவு 07/07/26 செவ்வாய்க்கிழமை இருந்து இந்த நடைமுறையானது அமலில் வந்துள்ளது என நம்மிடம் தெரிவித்தார் தற்பொழுது அனைத்து பேருந்துகளுமே மகளிர் பயணம் பேருந்துகள் என இயக்கப்பட்டு வருகிறது இதனால் சற்று குழப்பமும் ஏற்படுகிறது. ஏனென்றால் மகளிர் பயணம் என்றால் மகளிர் பேருந்து என நினைத்து சிலர் ஆண்கள் அதில் ஏற நினைத்து பயப்படுகிறார்கள் குழப்பத்தை தீர்க்க போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்குமா





