கன்னியாகுமரி, சின்னமுட்டம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு திங்கள்கிழமை(ஜூலை_28) அன்று கன்னியாகுமரி – சின்னமுட்டம் அனைத்து மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் ஊரைச் சேர்ந்த செல்வம் (51) என்ற மீனவர் கடந்த சில நாள்களுக்கு முன்னர் கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து உயிரிழந்தார். இம்மீனவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் ஒருநாள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில் உயிரிழந்த மீனவர் செல்வத்தின் மகளுக்கு கன்னியாகுமரி – சின்னமுட்டம் அனைத்து மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ. 1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் தீபா முன்னிலையில் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் இதனை வழங்கினர். இந்த நிவாரண உதவியை வழங்கிய மீனவர்கள் சங்கத்தினருக்கு மீனவர் செல்வத்தின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.