• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வெளியானது அராபிக் குத்து! இது மெலோடிக் குத்து!

காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘அரபு குத்து’ படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை வெளியானது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில், கடந்த வாரம் இப்படத்தின் புரோமோவின் மூலம் இன்று அரபி குத்துப்பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அராபிக் குத்து பாடல் வெளியானது.

இன்று காலை முதல் விஜய் ரசிகர்கள் அரபி குத்து அப்டேட் குறித்து ட்ரெண்ட் செய்து வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள அராபிக் குத்து பாடலை விஜய் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்!