• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மார்ச் 10-ம் தேதி சூர்யா நடிக்கும் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது!

பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்,பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜூலை-23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. ‘பசங்க-2’ படத்தை தொடர்ந்து சூர்யா இரண்டாவது முறையாக இயக்குனர் பாண்டிராஜுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திலிருந்து வெளியான ‘வாடா தம்பி’, ‘உள்ளம் உருகுதையா’, ‘சும்மா சுர்ருன்னு’ போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பிப்ரவரி-3ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக படம் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது மார்ச் 10ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.