பண்ருட்டி ஸ்ரீபெரும்புதூர் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்களுடைய பிள்ளைகளை பார்க்க வந்த பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது.
பண்ருட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்து வந்து பார்க்க வந்தபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது நுழைவாயிலின் முன்பாக காத்திருந்து வருகின்றனர்.

சென்னை தாம்பரம் சிட்லபாக்கம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் விடுதியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக அதே விடுதியில் காவலாளியாக பணிபுரிந்த மேத்யூ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அங்கு தங்கி இருக்கும் 128 பெண்களிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வறுமை கோட்டிற்கு கீழே உள்ள பெண்கள் தாய் தந்தையை இழந்த பெண்கள் அல்லது தந்தையை மட்டும் இழந்த பெண்கள் என ஆதரவற்ற குழந்தைகள் முதல் 18 வயது பெண்கள் வரை இங்கே தங்கி இருக்கும் நிலையில் எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து இங்கு தங்கி இருக்கும் மற்ற பெண்களின் உறவினர்கள் அல்லது பெற்றோர்கள் அவர்களைப் பார்ப்பதற்காக சொந்த ஊரிலிருந்து அரசு தந்து விடுதி நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் தங்கும் விடுதி நிர்வாகம் சார்பாக அவர்களை உள்ளே செல்வதற்கு அனுமதிக்காமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் தற்சமயம் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது எனக்கூறி வெளியே அனுப்பி வருவதால் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக சொந்த ஊரிலிருந்து வந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
உள்ளே இருக்கும் தங்கள் குழந்தைக்கு எந்த நிலைமையில் உள்ளார்கள் என்பதை தெரிய முடியாமல் மன வருத்தத்துடன் ஆங்காங்கே காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டு வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)