• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

காலையிலேயே குட்நியூஸ்… வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு!

ByP.Kavitha Kumar

Feb 1, 2025

தமிழ்நாட்டில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1959.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தினமும், சிலிண்டர் விலை மாதம் தோறும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலை நிலவரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி வணிக பயன்பாட்டு கியாஸ் சிலிண்டரின் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1959.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது.

வணிக கியாஸ் சிலிண்டரின் விலை கடந்த ஜூலை மாதம் முதலே மாதந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதற்கிடையே கடந்த மாதம் சிலிண்டர் விலை குறைந்தது. அதனைத் தொடர்ந்து இந்த மாதமும் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.