குமரி வடசேரி அண்ணா சிலை அருகே அமைச்சர் மனோதங்கராஜ்க்கு மாலை வரவேற்பு ஏற்பாடு. குமரி மாவட்டத்தின் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மனோ தங்கராஜ், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இடைக்காலமான 7_மாதங்களில், அமைச்சராக இல்லையே என்ற எந்த சங்கடமும் இன்றி, மேற்கு மாவட்டத்தில் இயக்கப்பணியில் எவ்விதமான தொய்வும் இன்றி இவரது பணி தொடர்ந்தது.
குமரி மாவட்டத்திற்கு எந்த துறை அமைச்சர் வந்தாலும், அந்த நிகழ்வுகளில் எவ்வித தயக்கமும் இன்றி மனோதங்கராஜியின் பணிகள் தொடர்ந்தது.
குமரி மாவட்டத்தில் ஆளும் அரசின் ஒற்றை பிரதிநிதியாக இருந்தும் அமைச்சரவையில் இடம் இல்லாதது.!! மாவட்ட மக்களின் மத்தியில் ஒரு குறைவாகவே இருந்தது.
தமிழக முதல்வர் கடந்த டிசம்பர் மாதம் ஐயன் வள்ளுவர் வான் உயர சிலையின் 25_ வது ஆண்டு விழா நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ அமைப்பின் அனைத்து பிரிவுகளின், ஆயர்கள் முதல்வரை சந்தித்து மாவட்டத்தில் திமுக சார்பில் ஒற்றை மக்கள் பிரதியான மனோதங்கராஜ்க்கு, அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கூட்டாக வலியுறுத்தி முறையிட்டது.
சுவாமி தோப்பு தலைமைப் பதி பூஜித குரு பால பிரஜாபதி அண்மையில் முதல்வருக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வைத்த கோரிக்கை.
முதல்வரால் கடந்த 28_ம் தேதி மீண்டும் அமைச்சராக, ஏற்கனவே அவர் வகித்த பால்வளத்துறைக்கே மனோதங்கராஜ்யை அமைச்சராக்கிய நிலையில், அமைச்சர் பதவி ஏற்ற மனேதங்கராஜ் நாளை(மே-1) குமரி வரும் நிலையில், வடசேரி அண்ணா சிலை அருகே மாலை மிகச்சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் தயாராகி வருகிறது.