• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க ரெடி..விஜய் மக்கள் இயக்கத்தினர்

Byமதி

Nov 25, 2021

ஈரோட்டில் நடந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆலோசனை கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளில் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். இந்தநிலையில் ஈரோடு மாவட்டத் தலைவர் பாலாஜி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுவது, மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.