விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் உள்ள நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
நூலக வாசகர் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்அழகேசன் தலைமையில் நடைபெற்ற வாசகர் வட்ட சிறப்புகூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் மற்றும் வாசகர்களுக்கு தேவையான புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும், திருச்சுழி அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற அழகுசுந்தரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திருச்சுழி நூலக வளர்ச்சி நிதியாக 5 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி நூலக பெரும் புரவலராக இணைந்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நூலகப் பணியாளர் மஞ்சுளா சிறப்பாக செய்திருந்தார். கிளை நூலகர் பாஸ்கரன் நன்றி கூறினார்.