• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இந்தி படியுங்க.. உள்துறை அமைச்சர் அமித்ஷா

ByA.Tamilselvan

Sep 14, 2022

இந்திய வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்ள இந்தி மொழியை அனைவரும் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.
இந்தி திவாஸ் அல்லது இந்தி மொழி தினம் என்பது செப்டம்பர் 14-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசு நாடு முழுவதும் இந்தி தின கொண்டாட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் குஜராத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிராந்திய மொழிகளுக்கு மாற்றாக என்பது அல்லாமல் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கொண்டுவர வேண்டும். மாநில மக்கள் தங்களுக்கு இடையேயான உரையாடல்களை இந்தியில் மேற்கொள்ள வேண்டும்; தேசத்தின் ஒற்றுமைக்கு இந்தி பங்களிப்பு முக்கியம் என்றார் .மேலும் அவர் பேசும் போது
இந்திய மக்கள் அனைவரும் தங்களது பிராந்திய (உள்ளூர்) மொழிகளை கற்க வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும். பிராந்திய மொழிகளை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தி மொழி அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் நட்பு மொழி. இந்தியாவை ஒருங்கிணைக்கக் கூடிய மையமாக இருக்கிறது இந்தி மொழி. நமது கலாசார ஓட்டத்தில் இந்தி மொழியும் பிராந்திய மொழிகளும் முதன்மையானவை. நமது கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் ஆன்மாவை உணர்ந்து கொள்ள இந்தி மொழியை கற்பது அவசியம். இவற்றை புரிந்து கொள்ள பிராந்திய மொழிகள் அவசியம்.