• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மறுதேர்தல் தேவையற்றது! – அமமுக வேட்பாளர் வேண்டுகோள்!

தமிழக தேர்தல் ஆணையம், ஜெயங்கொண்டம் நகராட்சி 16 வது வார்டுக்கு மறு தேர்தலை நடத்த உத்தரவிட்டதை அடுத்து கலெக்டர் ரமணா சரஸ்வதி, மேலிட தேர்தல் பார்வையாளர் பூங்கொடி உட்பட அதிகாரிகள் நேற்றிரவு 9.30 மணி அளவில், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் மறு தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் நகராட்சி ஆணையர் சுபாஷினி, ஏடிஎஸ்பி ராஜாராம் டிஎஸ்பி கலை கதிரவன், உட்பட பலர் உடனிருந்தனர்.

அப்போது அமமுக நகர செயலாளர் முரளி தலைமையில், 16 வது வார்டில் வேட்பாளரான ரேஷ்மா அவரது கணவர் குடும்பத்தினர் உறவினர்கள் உட்பட அமமுகவினர், கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளரிடம், மனு அளித்து, மறு வாக்குப்பதிவு தேவையில்லை, மறு வாக்கு பதிவிற்கு கால அவகாசம் அளிக்கப்படவில்லை, வாக்களித்த வாக்காளர்கள் பலர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள  கல்லூரி  மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் அமமுக வின் வெற்றி பாதிக்கப்படுகிறது, எனவே தோல்வி அடைந்து அவமானப்படுவது விட மனுவை வாபஸ் வாங்க அனுமதி அளியுங்கள் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர்.