• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

‘பீஸ்ட்’ படத்தில் ரீ-கிரியேட் பாடலா?

தளபதி விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்போது போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன! இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

ரீ-கிரியேட் பாடல்?
ஏற்கனவே அனிருத் கடைசியாக இசையமைத்த விஜய் திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்தில் கில்லி பட கபடி தீம் மியூசிக்கை ரீ-கிரியேட் செய்து மிரட்டி இருந்தார். தற்போது கிடைத்த தகவலின்படி மீண்டும் அதே போல, விஜய் பட பாடலை ரீ-கிரியேட் செய்ய உள்ளாராம் அனிருத்.

கில்லி படத்தில் மெகா ஹிட் பாடலான அர்ஜுனரு வில்லு பாடலை பீஸ்ட் படத்தில் ரீ-கிரியேட் செய்ய உள்ளாராம். அர்ஜுனரு வில்லு பாடலை எப்போது கேட்டாலும் நமக்கு ஒரு எனர்ஜி கிடைக்கும். அதனை அனிருத் தனது ஸ்டைலில் எப்படி ரீ கிரியேட் செய்கிறார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்!