எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஆர்பி உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் சட்டமன்றத்தில் டங்ஸ்டன் விவகாரத்தில் எழுப்பிய நேரடியான கேள்விக்கு கடைசிவரை பதில் அளிக்காமல் திணறிய விடிய திமுக அரசை தமிழக மக்கள் பார்த்து சிரித்ததை மறைக்க தன்னிலை மறந்து பிதற்றியுள்ள சட்ட மந்திரி ரகுபதிக்கு முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.