• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் ரத்ததான முகாம்

Byvignesh.P

Jul 7, 2022

தேனி அருகே அல்லி நகரத்தில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில், இரட்டைமலை சீனிவாசனார் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமிற்கு தேனி மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் புரட்சி பாண்டி தலைமை வகிக்க, மாவட்டச் செயலாளர் புரட்சி ரெட் மாவட்ட துணைச் செயலாளர் இரா தவமணி ஆகியோர் முன்னிலை வகிக்க, புரட்சி பாரத கட்சியின் தலைவர் ஆணைக்கிணங்க இரட்டைமலை சீனிவாசனார் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த ரத்ததான முகாமில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். இந்த முகாமில் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவர் பிரியா தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் மற்றும் மாவட்ட திட்ட மேலாளர் முகமது பருக் உள்ளிட்டோர் ரத்ததானம் வழங்கப்பட்ட ரத்தத்தினை சேகரித்தனர்.